ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விரைவில் கொவிட் தடுப்பூசி

ஆராயப்படுவதாக டாக்டர் அசேல குணவர்தன தெரிவிப்பு

பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன கூறியுள்ளார். கல்வி அமைச்சின் செயலாளர் இது குறித்து கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது குறைவடைந்தாலும் எதிர்வரும் நாட்களில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடிய சாத்தியமுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் குறைவான நோயாளர்கள் அடையாளங்காணப்பட்ட போதிலும், அபாய நிலை இன்னும் குறைவடையவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Thu, 06/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை