ஜனாதிபதியினால் மேலும் சில சேவைகள் அத்தியாவசியமாக பிரகடனம்

ஜனாதிபதியினால் மேலும் சில சேவைகள் அத்தியாவசியமாக பிரகடனம்-Essential Service Extraordinary Gazette-June-02-2021

கொவிட்-19 நோய்த் தடுப்பு தொடர்பிலான சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில், பொதுமக்களின் தேவைகளை கருத்திற் கொண்டு,  சதொச உள்ளிட்ட அரசாங்கத்தின் பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிரடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிவித்தல், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவினால் அதி விசேட வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம், மாகாண சபைகளின் கீழுள்ள அனைத்து சேவைகள், சுகாதார சேவையின் கீழுள்ள அனைத்து சேவைகளும் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி குறித்த அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

துறைமுக அபிவிருத்தி அதிகாரசபை, பெற்றோலிய கூட்டுத்தாபனம், ரயில்வே, இலங்கை போக்குவரத்துச் சபை உள்ளிட்ட சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி, கடந்த வாரம் (27) ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்த்ககது.

Thu, 06/03/2021 - 09:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை