மா, பால்மா, சமையல் எரிவாயு விலைகள்: அதிகரிக்கும் தீர்மானம் இல்லை

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன

மா, பால்மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எத்தகைய தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையிலுள்ள விலைகளின் அடிப்படையில் மக்களுக்கு அதே விலையில் மேற்படி அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வகையில் சில நிறுவனங்களுக்கு அரசாங்கத்தினால் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மேற்படி பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இதுவரை மேற்படி பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 06/28/2021 - 11:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை