ரஞ்சன் ராமநாயக்க வைத்தியசாலையில் அனுமதி

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துவரும், கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதைக்கு சிகிச்சைப் பெற்றுக்கொள்வதற்காக அவர் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு தொடர்பிலான இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.

கடந்த ஜூன் 19 ஆம் திகதி அவர் மருத்துவ பரிசோதனைகளுக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

அந்த பரிசோதனைகளின் முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், முழங்காலில் உள்ள உபாதைக்கு தங்கியிருந்து சிகிச்சைப் பெற வேண்டிய நிலை காணப்படுகின்றமை தெரியவந்துள்ளது. அதற்கமையவே ரஞ்சன் ராமநாயக்க நேற்று (28) காலி, கராபிட்டிய வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறைக்காவலர்களின் பொறுப்பில் அவருக்கு சிகிச்சையளிக்கப்படவுள்ளது.

கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கடந்த ஜனவரி 12 ஆம் திகதி 4 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக அவருக்கு இந்தச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Tue, 06/29/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை