சிவில் பாதுகாப்பு திணைக்களம் நிவாரண அடிப்படையில் மரக்கறி பொதிகள் விநியோகம்

நாளொன்றுக்கு 04 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் கொழும்புக்குள் பிரவேசிப்பதுடன் தற்பொழுது சுமார் ஐம்பதாயிரம் வாகனங்கள் மாத்திரமே வருகை தருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்தார்.  

பயணக் கட்டுப்பாடு அமுலிலுள்ள போதிலும் அத்தியாவசிய சேவைகள் இயங்க வேண்டும் எனவே,பொது போக்குவரத்து செயற்படாத நிலையில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுப்படுபவர்கள் வாகனங்களிளேயே வருகை தரவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.  

சுகாதாரம்,மின்சாரம்,துறைமுகம் போன்ற பல்வேறு அரச மற்றும் தனியார் துறைகளில் சேவையாற்றுபவர் வந்து போக வேண்டும். எனவே தான் தேவைக்கு வருகை தருபவர்களை தவிர ஏனையோர் சோதனைச் சாவடிகளில் திருப்பியனுப்பபட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.  

கொவிட் - 19 பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வீடு வீடாகச் சென்று நிவாரண அடிப்படையில் மரக்கறி பொதிகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் சிவில் பாதுகாப்பு திiணைக்களத்தினால் நேற்றுக் காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.  

வெலிசரயிலுள்ள சிவில் பாதுகாப்பு படையின் முகாமில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீரவின் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சிவில் பாதுகாப்பு படைவீரர்களினால் மரக்கரிகள் பொதியிடுவதையும் பார்வையிட்டதுடன் தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார். தம்புள்ளை, தம்புத்தேகம பகுதிகளிலுள்ள விவசாயிகளிடமிருந்து இடைதரகர்கள் இன்றி நேரடியாக மரக்கரிகளை கொள்வனவு செய்யும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் அதனை வெலிசரை முகாமில் 12 மரக்கரி வகைகள் உள்ளடங்கும் வகையில் பொதி செய்து 500 ரூபாவிற்கு நிவாரணமாக விநியோகித்து வருகின்றனர். சுமார் 10 வண்டிகளில் விநியோகிக்கப்படும் மேற்படி நடவடிக்கைகளை அமைச்சர் பார்வையிட்டார்.

ஸாதிக் ஷிஹான்   

Thu, 06/03/2021 - 08:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை