அக்கரைப்பற்றில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கமைவாக, அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் எல்லைக்குட்பட்பட்ட பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.யு.அப்துல் சமட்; தலைமையிலான் இடம்பெற்ற இவ்டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தின்போது, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார பூச்சியியல் உத்தியோகத்தர்கள், சிவில் சமூகத்தினர் போன்றோர் இணைந்து இவ்வேலைத் திட்டத்தினை முன்னெடுது வருகின்றனர்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கமைவாக, இப் பிரதேசங்களில் உள்ள வீடுகள், வெற்றுக் காணிகள், மத ஸ்தலங்கள், வர்த்தக நிலையங்கள் அதன் சுற்றுப்புறச் சூழல்கள் போன்றன அவதானிக்கப்பட்டு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், டெங்கு நுளம்பு பரவக் கூடிய ஏதுவான இடங்களை கொண்டிருந்தவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் ,அவர்களுக்கு அறிவுறுத்தல்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இதன்போது டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு, சுகாதாரத் துறையினரால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதுடன், டெங்கு நுளம்புகள் பரவக் கூடிய சூழலில் டெங்கு ஒழிப்பு இரசாயனங்கள் மற்றும் மீன்குஞ்சுகள் போன்றன இடப்படுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இவ்விடங்களை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், வடிகான்கள், கால்வாய்கள், நீரேந்து பிரதேசங்கள் போன்றன சுத்தப்படுத்தப்பட்டு டெங்கு நுளம்புகள் உண்டாகும் சூழலும் இடங்களும் அழித்தொழிக்கப்பட்டன.

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக நடைபெற்று வரும் இவ்வேலைத் திட்டத்தின் போது வர்த்தக நிலையங்கள் மக்களின் குடியிருப்புப் பிரதேசங்கள் போன்றன விஷேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், கிராமத்தின் பிரதான பாதைகள், வடிகான்கள் போன்றன கண்காணிக்கப்பட்டு அதனை துப்புரவு செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

(அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்)

 

(அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்)

Wed, 06/30/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை