களனி பாலம் முதல் அத்துருகிரிய அதிவேக பாதை மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணி

பிரதமரினால் இன்று ஆரம்பித்து வைப்பு

புதிய களனி பாலத்திலிருந்து அத்துருகிரிய வரை நிர்மாணிக்கப்படும் அதிவேக பாதை மற்றும் கொழும்பு, கண்டிக்கு இடையிலான வாகன நெரிசலை தவிர்க்க மேம்பாலங்கள் அமைக்கும் திட்டம் சுகாதார நெறிமுறைகளுக்கு அமைய மிக குறைந்த எண்ணிக்கையானோரின் பங்களிப்புடன் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அலரி மாளிகையில் இருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் இன்று ஆரம்பிக்கப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைகளுக்கு அமைய அபிவிருத்தியை முன்னெடுக்க மக்களுக்கு சரியான பாதை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும் .அதனால் வாகன நெரிசலை குறைக்க இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பிரதமரின் ஆலோசனையின் பேரில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

Mon, 06/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை