அரச புகைப்பட விழா

தேசத்தின் ஒத்துழைப்புடன் படைப்புக் கலையில் புகைப்படவியலில் நிலையான தரத்தினை உருவாக்கவும் புகைப்படவியலுக்கான அதிநவீன முன்னுரிமையை உயர்த்தவும் அரசாங்கம் புகைப்பட விழா ஒன்றை நாளை மறுதினம் 19 ஆம் திகதி நடாத்தவுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அரச புகைப்பட ஆலோசனைக் குழுவும், கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து இவ்விழாவை நடத்துகின்றன.

இவ்விழாவில் இலங்கை பிரஜையாகவுள்ள மாணவர்கள் அல்லது துறைசாராதவர்கள், தொழில்சார் புகைப்படக் கலைஞர்களுக்கு இலங்கை அரச புகைப்பட விழாவில் புகைப்பட போட்டிக்காக தமது படைப்புக்களை சமர்ப்பிக்குமாறு கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் அரச புகைப்படக்கலை ஆலோசனைக் குழு அழைப்பு விடுக்கின்றது.

போட்டிகள், படசேர்க்கை, உருவப்படம், திருமண புகைப்படம், வணிக ரீதியானவை மற்றும் விளம்பரங்கள், பெரும புகைப்படவியல்/ நுண்ம புகைப்படவியல், டிஜிட்டல் வடிவமைப்புகள், நவநாகரிகக் கலை மற்றும் கவர்ச்சி, நீருக்கு கீழ், விலங்குகள் உருவப்படம், விலங்குகளின் நடத்தை, செய்தி, விளையாட்டு, வாழ்க்கை முறைமைகள் மற்றும் கலாசார அம்சங்கள், சுற்றுலா மற்றும் தெருக்கள், இயற்கை போன்ற பிரிவுகளில் நடைபெறும்.

புகைப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 04.07.2021 ஆகும்.

இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளுக்கு அரச புகைப்பட மேம்படுத்தல் பிரிவு 0113167540 ஐ தொடர்பு கொள்ளவும்.

Thu, 06/17/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை