கட்டுப்பாட்டை தளர்த்துவது தடுப்பூசி போடாதவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதுடன், உயிரிழப்பையும் அதிக அளவில் ஏற்படுத்தி வருவது உலக நாடுகளுக்கு சவாலாக திகழ்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவத் தொடங்கும்போது, பெரும்பாலான நாடுகள் நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியது. முதலில் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்டது. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க போன்ற நாடுகள் மருத்துவ கட்டமைப்பு வலுப்படுத்த கொரோனா தொற்றின் தாக்கம் வெகுவாக குறைந்தது.

சரி இனிமேல் அப்படியே சென்றுவிடும் என பல நாடுகள் ஊரடங்கை தளர்த்தியது. பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமானது, பதுங்கியிருந்து பாயும் புலிபோல் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் வேகம் எடுக்க ஆரம்பித்தது.

தென்ஆபிரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்தது. இதற்கிடையே ஆறுதலாக தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது. தடுப்பூசி மீது பல விமர்சனம் எழுந்தாலும், பணி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அதி தீவிரமாக பரவும் தன்மை கொண்டதாக இருந்தது. ஏற்கனவே முதல் அலையின்போது அனுபவம் பெற்றதால், பெரும்பாலான நாடுகள் 2-வது அலையை சமாளித்து விட்டன.

இந்தியாவில் கொரோனா நன்றாக குறைந்த நிலையில், கடந்த பெப்ரவரியில் இருந்து 2-வது அலை வீசத் தொடங்கியது. 2-வது அலையின்போது கொரோனா உருமாற்றம் அடைந்தது. டெல்டா எனப் பெயரிட்ட அந்த வைரஸ் மிகத் தீவிரமாக பரவியதுடன், உடனடியாக மூச்சுத் திணறல் நிலைக்கு நோயாளிகளை கொண்டு சென்றது.

இதனால் இந்தியாவில் ஒக்சிஜன், வெண்டிலேட்டர்ஸ் தட்டுப்பாடு அதிக அளவில் தேவைப்பட்டது. தொழிலதிபர்கள், வெளிநாட்டு உதவிகளுடன் இந்தியா 2-வது அலையை சமாளித்துவிட்டது.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ராஸ் அதோனம் உருமாற்றம் கொரோனா மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ராஸ் அதோனம் கூறுகையில் ‘‘டெல்டா உருமாற்றம் உட்பட உருமாற்றம் கொரோனா உலகளாவிய பரவுதல் காரணமாக கவலையை ஏற்படுத்தி வருகிறது. கட்டுப்பாட்டை தளர்த்துவது தடுப்பூசி போடாதவர்களுக்கு விரைவில் பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்’’ என எச்சரித்துள்ளார்.

Wed, 06/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை