ஒன்லைன் மூலம் மதுபான விற்பனை: அரசாங்க மருத்துவர் சங்கம் எதிர்ப்பு

மதுபான வகைகளை வீடுகளுக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்யும் நடைமுறையை தாம் எதிர்ப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அது ஒரு சூழ்ச்சியான செயற் திட்டம் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது

இலங்கையில் மது பாவனை காரணமாக நாளொன்றில் 63 பேரளவில் மரணமடைகின்ற அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் தினமும் சுமார் 60 பேர் வரை மரணமடைந்து வருகின்றனர் என்றும் மேற்படி சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் விஷேட மருத்துவர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

நாட்டில் பயணத் தடை நடைமுறையில் உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களை அல்லது மருந்துப் பொருட்களை வீடுகளுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பில் இதுவரை உரிய முறைமை ஒன்று நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படாத நிலையில் மதுபான விற்பனை தொடர்பில் இவ்வாறான செயற்பாடொன்றை மேற்கொள்வதற்கு இந்தளவு அவசரமாக நடவடிக்கை எடுத்துள்ளமையானது வெட்கப்படவேண்டிய விடயம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 06/18/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை