'இந்தியாவுடனான உறவு காஷ்மீர் மக்களுக்குச் செய்யும் ‘துரோகம்’

இந்தியா மூலம் சிந்தப்பட்ட காஷ்மீர் இரத்தத்திற்கு விலைகொடுத்து அந்த நாட்டுடன் பாகிஸ்தான் வர்த்தகத்தை மேம்படுத்தாது என்று குறிப்பிட்டிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தற்போதைய சூழலில் இந்தியாவுடன் எந்த ஒரு இயல்புநிலையை ஏற்படுத்துவதும் ஆக்கிரமிப்பு நிலத்தில் வாழும் மக்களுக்கு செய்யும் பெரும் துரோகம் என்று தெரிவித்தார்.

மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்வில் பங்கேற்ற பிரதமர், இந்தியாவுடனான உறவை மேம்படுத்தினால் பெரும் நன்மைகள் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார். ஐரோப்பிய ஒன்றியம் போன்று உலகின் ஏனைய பகுதிகளில் உள்ள அமைப்புகளை இதற்கு அவர் உதாரணமாக குறிப்பிட்டார்.

‘நான் அதிகாரத்திற்கு வந்த முதல் நாள் தொடக்கம் இந்தியாவுடன் நட்புறவை ஏற்படுத்தவும் காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் முயன்றபோதும் தற்போது நாம் உறவை வழக்கத்திற்கு கொண்டுவந்தால் காஷ்மீர் மக்களுக்கு செய்யும் பெரும் துரோகமாக அமையும்’ என்றும் இம்ரான் கான் கூறினார்.

Thu, 06/03/2021 - 08:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை