சமையல் எரிவாயு இறக்குமதி:முறைகேடுகளை தவிர்க்க அரசாங்கம் நேரடி தலையீடு

மோசடி முறைகேடுகளை தவிர்க்கும் வகையில் எதிர்காலத்தில் சமையல் எரிவாயு இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளில் அரசாங்கம் நேரடியாக தலையிடும் என சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்காலத்தில் சமையல் எரிவாயு கொள்வனவு செய்யும்போது திறைசேரியின் உயர்மட்ட சபையொன்றின் தலையீட்டுடன் அந்த நடவடிக்கைகள் இடம்பெறும். அதன்மூலம் சமையல் எரிவாயு இறக்குமதி நடவடிக்கைகளில் இடம்பெறும் மோசடிகள், முறைகேடுகள் மற்றும் கமிஷன் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்படும் என்று தெரிவித்த அவர், இந்த தீர்மானத்திற்கிணங்க முறைகேடுகள் காரணமாக நிறுவனங்களிடமிருந்து இழக்கப்பட்டுள்ள பாரிய அளவிலான நிதியை மீதப் படுத்திக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Fri, 06/25/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை