நீர் கட்டணத்திற்கு ஒருமாத காலம் அவகாசம்

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் நீர் கட்டணம் செலுத்த முடியாத பாவனையாளர்களுக்கு ஒரு மாதம் நிவாரண காலம் வழங்க முடிவு செய்துள்ளதாக நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவநாணயக்கார தெரிவித்தார். கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதையடுத்து நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இரு வாரங்களுக்கு மேலாக நீடிக்கும் பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி அல்லது 21 ஆம் திகதி நீக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் மக்களுக்கு நீர்கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதலாவது கொரோனா அலையின் போதும் கட்டணம் செலுத்த நிவாரண காலம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் திகதியிலிருந்து ஒரு மாதம் நிவாரண காலம் வழங்க இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.இக்காலப்பகுதியில் துண்டிப்பு எதுவும் மேற்கொள்ளப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (பா)

Mon, 06/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை