இராணுவத்தினரால் வவுனியா நகரில் தொற்று நீக்கம்

வவுனியா பிரதேசத்தில் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இராணுவத்தினரால் கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய வவுனியா நகரத்தில் உள்ள பஸ் நிலையம், புகையிரத நிலையம்| நலன்புரி நிலையங்கள், அரச மற்றும் தனியார் வங்கிகள், விற்பனை நிலையங்கள் பொது வைத்தியசாலை வளாகம், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்கள் மற்றும் முச்சக்கர வண்டி தரிப்பு நிலையங்கள் என்பன படையினரால் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டன.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஹேமந்த் பண்டார வின் பணிப்புரைக்கமைய இடம்பெற்ற இந்த தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் 17வது சிங்க ரெஜிமென்ட் படைவீரர்கள் 8வது கள பொறியியலாளர் படை வீரர்கள் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நகரசபை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Mon, 06/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை