கப்பல் கம்பனிக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு முஸ்தீபு

நீதியமைச்சர் சப்ரி தலைமையில் ஆராய்வு

எம். வீ எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறும். துறைமுக அதிகாரசபை உயரதிகாரிகள், கடல் மாசடைவை தடுக்கும் அதிகார சபை, கரையோர பாதுகாப்பு அதிகாரசபை உட்பட தொடர்புள்ள  அரச நிறுவன பிரதிநிதிகள் இதில் பங்கேற்கவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்தது,

இங்கு எடுக்கப்படும் முடிவுக்கமைவாக இக் கப்பல் கம்பனியிடமிருந்து நாட்டுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. நிறுவன மட்டத்தில் தகவல்கள் சேகரிக்கப்படுவதோடு கப்பல் தீப்பற்றி கடலில் மூழ்குவதால் ஏற்படும் தேசங்களை மதிப்பீடு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கப்பல் விபத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 05 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கப்பல் தீ விபத்தினால் இலங்கைக் கடற்பரப்பில் பாரிய சூழல் மாசடைவு ஏற்பட்டுள்ளதோடு அதனை சீர் செய்ய கடற்படையும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தரப்பினரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.(பா)

Mon, 06/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை