புதிய திரிபு வைரஸ் பாதிக்க வாய்ப்பில்லை

மருத்துவ நிபுணர்கள் தெரிவிப்பு

 

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை முறையாகப் பெற்றுக் கொண்டவர்களுக்கு மிக வேகமாக பரவக்கூடிய டெல்டா திரிபு கொரோனா  வைரஸிலிருந்து சாத்தியமான பாதுகாப்பு கிடைக்கும் என சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள அறிக்கைகள் மூலம் அது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள மருத்துவ நிபுணர்கள்,

தற்போது இலங்கையில் மக்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி நாட்டில் தற்போது உள்ள கொரோனா வைரஸ் மற்றும் புதிய திரிபு கொரோனா வைரஸ் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்கு போதுமானது என அவர்கள் தெரிவித்துள்ளதுடன் ஏற்படக்கூடிய வைரஸ் தொற்று மற்றும் மரணங்களை மட்டுப்படுத்துவதற்கு அது போதுமானது என்றும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை தற்போது நாட்டில் பரவி வரும் பிரித்தானிய எல்பா திரிபு வைரஸை விட வேகமாக பரவக்கூடிய இந்திய டெல்டா திரிபு வைரஸ் நாட்டில் சிலருக்கு இனங்காணப்பட்டுள்ளன நிலையில் வைரஸ் தொற்று பரவல் அபாயம் அதிகரிக்க இடமுள்ளதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

அடிக்கடி புதிதாக இனங் காணப்படும் திரிபு வைரஸ் தொடர்பான தகவல்கள் மிக விரைவாக ஆய்வு செய்யப்பட்டு அது தொடர்பில் தெரிவிக்கப்படும் விடயங்களில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதாகவும் அந்த பணியகம் தெரிவித்துள்ளது.

அவ்வாறான திரிபடைந்த வைரஸ் உருவாகும்போது அதன் மோசமான செயற்பாடுகள் விரைவாக மக்கள் மத்தியில் பரவ ஆரம்பித்து விடுவதாகவும் அந்த பணியகம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு புதிதாக இனங் காணப்படும் திரிபு கொரோனா வைரஸ்கள் முன்னர் இருந்த கொரோனா வைரஸை விட இலகுவாக நபர்களில் பரவக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அந்த பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 06/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை