இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கவுள்ள அமெரிக்கா

வெள்ளை மாளிகை தெரிவிப்பு

கொரோனா வைரஸ் தடுப்பூசியை பகிர்ந்துகொள்வதற்கான நாடுகளில் ஒன்றாக இலங்கையை அமெரிக்கா தெரிவு செய்துள்ளது.

அமெரிக்கா 25 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பகிர்ந்துகொள்வதற்காக இலங்கை உட்பட பல நாடுகளை தெரிவு செய்துள்ளது. உலகின் பல பாகங்களிலிருந்தும் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை வழங்குமாறு வேண்டுகோள்கள் வந்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.  பரவலை முழுமையாக இல்லாதொழிக்க முடியாது. ஒரு தரப்பினரது பொறுப்பற்ற செயற்பாடுகளினால் தற்போதைய நெருக்கடி நிலை தோற்றம் பெற்றுள்ளதென தொலைநோக்கு கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

கொவிட்-19 வைரஸ் பரவலை கருத்திற் கொண்டு நாடு முழுவதும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை தொடர்பில் வினவியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பொது மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கமைய இம்மாத இறுதி வாரத்திலிருந்து அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் கடுமையான சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதென்றார்.

 

 

Sat, 06/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை