நாட்டில் பரவாமலிருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும்

அமைச்சர் பவித்ரா அதிகாரிகளுக்கு பணிப்பு

இந்தியாவில் மிக வேகமாக பரவும் டெல்டா கொரோனா திரிபு வைரஸ் தொற்று நோயாளர்கள் சிலர் கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அப்பகுதியிலிருந்து அந்த வைரஸ் வெளியில் பரவுவதை தடுக்கும் வகையில் உரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்புக்கான செயலணியின் மீளாய்வுக் கூட்டம் நேற்றைய தினம் சுகாதார அமைச்சில் நடைபெற்றபோது இந்திய புதிய திரிபு வைரஸ் பரவல் தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அது நாட்டில் பரவாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதன்போது பணிப்புரை விடுத்தார். மேற்படி மீளாய்வுக் கூட்டத்தின்போது மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கிணங்க கொழும்பு தெமட்டகொடை பகுதியை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி மாதிரி பெறப்பட்டு டெல்டா திரிபு கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும், அந்த தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளவும் பணிப்புரை விடுத்துள்ளார், அத்துடன் தற்போது நாட்டில் அதிகமான வைரஸ் தொற்று நோயாளர்கள் காணப்படும் பகுதிகளில் மேற்படி இந்திய டெல்டா பிரிவு வைரஸ் பரவல் இடம் பெற்றுள்ளதா என்பதை இனம் காண்பதற்கான விசேட பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்துமாறு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 06/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை