நயினாதீவு ஆலய பிரதம குரு மறைவுக்கு பிரதமர் இரங்கல்

பன்மொழி புலமையாளர் என பாராட்டு

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் குருமணி சிவஸ்ரீ ஜம்புகேஸ்வர மகேஸ்வர சிவாச்சாரியாரின் மறைவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார். குருமணி சிவஸ்ரீ ஜம்புகேஸ்வர மகேஸ்வர சிவாச்சாரியார் பன்மொழி புலமையாளராக விளங்கியதாக பிரதமர் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச இந்துக்குருமார் ஒன்றியத்தின் குருபீடாதிபதியாக இருந்த அவர் அண்மையில் காலமானமை குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது;

இலங்கைத் திருநாட்டின் புராதனம் மிக்க சக்தி ஆலயங்களில் ஒன்றாகவும் யாழ்ப்பாண தீபகற் பத்தைச் சூழவுள்ள சப்த தீவுகளில் ஒன்றாகவும் திகழும் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் குருமணி சிவஸ்ரீ ஜம்புகேஸ்வர மகேஸ்வர சிவாச்சாரியார் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை கொள்கிறேன்.

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியிலுள்ள அந்தணர்களுக்கான குருகுலத்தை நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது அங்குரார்ப்பணம் செய்து வைத்தேன். அந்த நிலையம் ஆரம்பிக்கப் படுவதற்கு முன்னின்று உழைத்தவர்களில் இவரும் ஒருவர்.

சர்வதேச இந்துக்குருமார் ஒன்றியத்தின் குரு பீடாதிபதியாக இருந்து நல்லதோர் சேவை ஆற்றியவர்.

சிறந்த ஆகம விற்பன்னராகச் செயற்பட்டவர், பன்மொழிப் புலமையாளர், பல நூற்றுக் கணக்கான சிவாகமக் கிரியைகளை முதன்மைக் குருவாக இருந்து தேசம் எங்கணும் சிறப்புற நடத்திய பெருமைக்குரியவர்.

அன்னாரது பிரிவு நமக்கெல்லாம் ஒரு பேரிழப்பு. அவரது உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Thu, 06/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை