தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி நிலை ஏற்படும்

சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்கம் கவலை

இரசாயன உர வகைகளை இறக்குமதி செய்வதை நிறுத்துவது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தினால், நாட்டில் தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைவதாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. சேதன உர வகைகளை மட்டும் பயன்படுத்தி தேயிலை தோட்டங்களை பராமரிப்பது சிக்கலானதென்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கண்டி - யட்டிநுவர தேயிலை உற்பத்தியளர்கள் உரமின்மையால் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. போதியளவு உரமின்மையால் தேயிலைச் செடிகள் பாதிப்படைந்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் காணப்படும் சேதன பசளையுடன் நைட்ரஜன் உயிரியல் மூலக்கூறுகளை சேர்ப்பதன் மூலம் வெற்றிகரமாக சேதன பசளையை உற்பத்தி செய்ய முடியுமென விவசாயம் தொடர்பான அடிப்படை கல்வி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளரான, பேராசிரியர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

நவீன தொழில்நுட்பம் மற்றும் விவசாய முறைகள் மூலம் வெவ்வேறு மூலக்கூறுகளை பயன்படுத்தி சேதனப் பசளையை உற்பத்தி செய்வதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

Fri, 06/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை