உர இறக்குமதி எனும் போர்வையில் சீனக் கழிவுகள்

JVP விஜித ஹேரத் குற்றச்சாட்டு

கார்போனிக் உரங்களை இறக்குமதி செய்கின்றோம் என்ற போர்வையில் தனது வர்த்தகர்கள் மூலம் சீனாவின் நகர கழிவுகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது. ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். இதன் மூலம் இரசாயன  உரங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை விட மிக மோசமான சூழல் பாதிப்புகள் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

யூரியாவை தெளிப்பதன் மூலம் இந்த நகரக்கழிவுகளை கார்போனிக் உரம் என தெரிவித்து சீனா பல நாடுகளிற்கு அவற்றை விற்பனை செய்கின்றது என விஜிதஹேரத் தெரிவித்துள்ளார்.

எங்கள் சூழலிற்கு மண்ணிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை இறக்குமதி செய்வதை அனுமதிக்க முடியாது. கார்போனிக் உரங்களை இறக்குமதி செய்வதை நாங்கள் எதிர்க்கின்றோம் என தெரிவித்துள்ள அவர் கார்போனிக் உரங்களை விவசாயிகள் பெறுவதற்கான உரிய பொறிமுறைகளை அறிமுகப்படுத்திய பின்னர் இரசாயன உரங்களையும் எப்போதோ தடை செய்திருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தற்போது அவ்வாறான பொறிமுறையில்லை. தேயிலை தொழிற்துறை பெரும் நெருக்கடியில் உள்ளது. சிங்கப்பூரிற்கு தங்கள் உற்பத்திகளை ஏற்றுமதி செய்த காய்கறி விவசாயிகள் தங்கள் சந்தைகளை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tue, 06/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை