எரிபொருள் விலை; சாத்தியமான சந்தர்ப்பத்தில் குறைக்கப்படும்

அமைச்சர் கெஹெலிய

எமக்குக் கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே நாம் எரிபொருள் விலைகள் குறைப்போம்.இந்த விடயத்தில் நாம் நெகிழ்வுப் போக்குடன் இருக்கிறோம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். பசில் ராஜபக்ஷ அமைச்சராக பதவி ஏற்றதும் எரிபொருள் விலை குறைக்கப்படுமென ஆளும் தரப்பில் சிலர் தெரிவித்துள்ளது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

அவ்வாறு கருத்து தெரிவித்த எம்.பியிடம் தான் அது பற்றி கேட்க வேண்டும். அமைச்சரவையில் அது பற்றி ஆராயப்பட்டிருந்தால் எனக்கு பதில் வழங்கலாம். எரிபொருள் விலை அதிகரிப்பு விடயம் தொடர்பில் பரவலாக பேசப்படுகிறது. எமக்கு கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலே விலைகளை குறைக்க தயாராக இருக்கிறோம் என்றார். (பா)

ஷம்ஸ் பாஹிம்

Wed, 06/30/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை