இந்திய கடற்படையினரால் இலங்கை மீனவர்கள் தாக்கப்படவில்லை

தாக்கப்பட்டதான செய்தி உண்மைக்கு புறம்பானது

இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை மூலம் தெரிவிப்பு

இந்திய கடற்படையினரால் இலங்கை மீனவர்கள், ஒருபோதும் தாக்கப்படவில்லையென இந்தியா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார், இந்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் தாக்கப்பட்டிருப்பதாக ஜூன் 17ஆம் திகதி வெளியாகியிருக்கும் செய்திகள் அனைத்தும் முற்றுமுழுதாக உண்மைக்கு புறம்பானவையாகும். இவ்வாறான எந்த ஒரு சம்பவமும் இடம்பெறவில்லையென நாம் மிகவும் உறுதியாக தெரிவிக்கின்றோம். மிகவும் உயர்ந்த ஒழுக்கத்தையும் தொழில் திறனையும் கடைப்பிடித்து வரும் இந்திய கடற்படை குற்றமற்ற வகையில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றி வருகின்றது.

ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் இருதரப்பு பொறிமுறைகள் மற்றும் புரிந்துணர்வுகள் ஆகியவற்றினூடாக இலங்கை - இந்திய மீனவர்கள் தொடர்பான சகல பிரச்சினைகளுக்கும் ஒரு மனிதாபிமான அடிப்படையில் தீர்வைக் காண்பதற்கு இந்தியா மிகுந்த உறுதிப்பாட்டுடன் உள்ளதென்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Sat, 06/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை