செனெகாவுக்கு பதில் பைஸர்: சுகாதார அமைச்சு அனுமதி

அஸ்ட்ரா செனெகா முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது முறையாக மொடெர்னா தடுப்பூசி அல்லது பைஸர் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதுடன் அதற்கான அனுமதியையும்  வழங்கியுள்ளது. இந்த தகவலை மருந்துப் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஒழுங்குபடுத்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: எஸ்ட்ரா செனெகா முதலாவது தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் இரண்டாவது தடுப்பூசியாக மேற்படி இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது. சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட தொற்றுநோய் தொடர்பான விசேட குழு நேற்றைய தினம் கூடியுள்ள நிலையில் அதற்கான அனுமதியை பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். அதற்கிணங்க 26,000 பைஸர் தடுப்பூசிகளும் மற்றும் ஒரு மில்லியன் மொடெர்னா தடுப்பூசிகளும் ஓரிரு வாரங்களில் நாட்டுக்கு கிடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 06/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை