எலிசெபத் மகாராணி முடிசூடிய எழுபது ஆண்டு கொண்டாட்டம்

பிரிட்டனின் எலிசபெத் மகாராணியின் 70 ஆண்டு ஆட்சியை அனுசரிப்பதற்கு நான்கு நாள் கொண்டாட்டம் நடத்தப்படவுள்ளது.

எலிசபெத் மகாராணி அரியணை ஏறி, அடுத்த ஆண்டுடன் 70 ஆண்டுகள் நிறையவடையவுள்ளது. அதற்கான நான்கு நாள் கொண்டாட்டம், 2022 ஜூன் மாதம் 2ஆம் திகதி  ஆரம்பமாவதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்தது.

மகாராணியின் 96ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் அணிவகுப்பு ஒன்று முதலில் நடைபெறும். அதில் 1,400க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டது.

சிறப்பு தேவாலயச் சேவையும் நேரடிக் கலைநிகழ்ச்சியும் நடத்தப்படும். அந்தக் கலைநிகழ்ச்சியில், உலகின் மிகப்பெரிய நட்சத்திரப் பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை குறிப்பிட்டது.

எலிசபெத் மகாராணி 1952ஆம் ஆண்டு பெப்ரவரி 6ஆம் திகதியன்று அரசாட்சியை ஏற்றார். அவருக்கு 1953ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் திகதி முடிசூட்டப்பட்டது.

Fri, 06/04/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை