இவ்வாரம் இரு தினங்களுக்கு பாராளுமன்ற அமர்வு

இவ்வாரம் இரு தினங்களுக்கு பாராளுமன்ற அமர்வு

இவ்வாரம் இரு தினங்களுக்கு மாத்திரம் பாராளுமன்ற அமர்வை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (21) சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொவிட்-19 பரவல் கருதி, நாளை (22) மற்றும் நாளை மறுநாள் (23) ஆகிய இரு தினங்களுக்கு பாராளுமன்ற அமர்வை நடாத்த இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Mon, 06/21/2021 - 11:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை