எல்லை மீறினால் பிரிட்டிஷ் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்

கருங்கடல் பகுதியில் பிரிட்டிஷ் கப்பல்கள் தொடர்ந்து பதற்றம் ஏற்படுத்த முனைந்தால், அவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது.

கிரைமியாவுக்கு (Crimea) அப்பால் உள்ள கடல்பகுதிக்குள் HMS Destroyer நுழைந்ததாக மாஸ்கோ கூறியது.

உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரைமியாவை 2014-இல் ரஷ்யா தன்வசமாக்ககியது.

ஆனால், உக்ரைன் கடல்பகுதியில்தான் கடற்படைக் கப்பல் பயணம் செய்ததாய்ப் பிரிட்டன் கூறியுள்ளது.

கப்பலை நோக்கி, எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அது பயணம் செய்த பாதையில் போர் விமானங்கள் வெடிகுண்டுகளைப் போட்டதாகவும் மாஸ்கோ தெரிவித்தது. ஆனால், வெடிகுண்டு தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை எனக் கூறிய பிரிட்டன், மிகத் தொலைவில் இருந்து எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாய்ச் சொன்னது.

பனிப்போருக்குப் பிந்திய காலத்தில் முதல் முறையாக நேட்டோ போர்க் கப்பல் ஒன்றுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதை ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.

ரஷ்யாவுக்கான பிரிட்டிஷ் தூதரைச் சந்திப்பதற்கு மாஸ்கோ அழைப்பாணை அனுப்பியுள்ளது.

Sat, 06/26/2021 - 14:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை