இவ்வார இறுதிக்குள் இலங்கை வருகிறது ஸ்புட்னிக் தடுப்பூசிகள்

இரண்டாவது டோஸ் செலுத்துவதற்குத் தேவையான ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்குமென இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் உறுதியளித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை அல்லது இந்த வார இறுதிக்குள் ரஷ்ய தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்குமென அவர் மேலும் கூறினார். இத் தடுப்பூசிகள் கண்டி மாவட்டத்திற்கு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 06/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை