கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கான ஸ்டிக்கர் முறை தற்காலிகமாக இடைநிறுத்தம்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன்

பயணத் தடை நடைமுறையிலுள்ள காலத்தில் கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டும் வேலைத் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ஸ்டிக்கர் நடைமுறை துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக அறியப்பட்டுள்ளதுடன் அதனை தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கொழும்புக்குள் உட்பிரவேசிக்கும் 70,000 வாகனங்களுக்கு முதல் நாளில் மட்டும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட நிலையில் அது பயணத்தடை நடைமுறையிலுள்ள கடந்த ஒருவார காலத்தோடு ஒப்பிடுகையில் அதற்கு சமமான தொகையாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு தினத்தில் மாத்திரம் ஒருவாரத்திற்கு கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்கள் கொழும்புக்குள் பிரவேசித்துள்ளதால் ஸ்டிக்கர் துஷ்பிரயோகம் இடம்பெறலாம் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.

எதிர்காலத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கான ஆவணங்கள் உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்றும் ஸ்டிக்கர் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 06/10/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை