லாகூர் மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மதபோதகர் தலைமறைவு

லாகூரைச் சேர்ந்த முஸ்லிம் மார்க்கப் பாடசாலையில் கற்கும் 20 வயதான மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டையடுத்து அப்பாடசாலையின் போதகரும் மார்க்க அறிஞருமான 60 வயதான அஸிஸ் உர் ரெஹ்மான் தலைமறைவாகியுள்ளார்.

பாகிஸ்தான் மார்க்கப் பாடசாலைகளைக் கண்காணிக்கும் அமைப்பான வபாஃக் உல் மதாரிஸ் அப் பாடசாலையில் இருந்து அவரை வெளியேற்றியுள்ளதோடு மார்க்க அறிஞர் பட்டத்தையும் பறித்துள்ளது. 

இத்துஷ்பிரயோகம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரபரப்பானதையடுத்தே அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இம் மாணவனை மேற்படி மதபோதகர் தொடர்ந்து தனது பாலியல் இச்சைக்கு உட்படுத்தி வந்ததாகவும் ஒரு கட்டத்தில் இதில் சலிப்பும் விரக்தியும் அடைந்த அம்மாணவன் தன் மீதான துஷ்பிரயோகத்தை மதபோதகர் அறியாத வகையில் காணொளிக் காட்சிகளாக எடுத்து அவற்றை கண்காணிக்கும் அமைப்புக்கு வழங்கியதையடுத்தே இவ்விவகாரம் வெளியே தெரியவந்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. அம் மாணவன் பல காணொளி மற்றும் குரல் பதிவுகளை தம்மிடம் அளித்திருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Wed, 06/23/2021 - 13:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை