ஈரான் கடற்படை கப்பல் மூழ்கியது

ஹார்மூஸ் நீரிணையில் தீப்பிடித்த ஈரானின் மிகப்பெரிய கடற்படை கப்பல்களில் ஒன்று மூழ்கியுள்ளது.

முக்கிய எண்ணெய் முனையமாக செயற்படும் தீவுப் பகுதியில் இந்தக் கப்பல் நேற்று காலை தீப்பிடித்த நிலையில் அதனை கட்டுப்படுத்த 20 மணி நேரம் போராடியபோதும் அந்த முயற்சி தோல்வி அடைந்ததாக ஈரான் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

கப்பலில் இருந்த 400 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக இராணுவம் தெரிவித்தது. இதில் 20 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பிரட்டனில் கட்டப்பட்ட இந்தக் கப்பல் 1979 இஸ்லாமிய புரட்சிக்கு சற்று முன்னர் இயக்கப்பட்ட நிலையில் பல்வேறு பேச்சுவார்த்தைக்கு பின்னர் 1984 ஆம் ஆண்டில் அது ஈரானிய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.

Thu, 06/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை