மூழ்கும் கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் கட்டுப்படுத்தலாம்

மூழ்கும் கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் கட்டுப்படுத்தலாம்

சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிப்பு

மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்படுமாயின் அதனை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொதுமுகாமையாளர் டர்னி பிரதீப் குமார இது தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ளார்.

கப்பலில் 322 தொன் எண்ணெய் காணப்பட்ட போதிலும் தற்போது எண்ணெய் உள்ளதா என்பது தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லையென அவர் கூறினார். கப்பலில் எண்ணெய்க் கசிவு ஏற்படுமாயின், அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக டர்னி பிரதீப் குமார குறிப்பிட்டுள்ளார். சுழியோடிகளையும் இதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொதுமுகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கப்பல் தீப்பற்றியதால் நாட்டிற்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீட்டை பெற்றுக் கொள்வதற்கு தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்க சிறப்பு குழுவொன்று செயற்பட்டு வருவதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. சட்ட மாஅதிபரின் தலைமையில் இந்தக் குழு செயற்படுகின்றது. தற்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அந்தந்த அரச நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 06/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை