திருத்தம் செய்வதற்கு புதிய நடைமுறை

இந்த ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியலை புதிய முறையின் கீழ் திருத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் வாக்காளர் பெயர்ப்பட்டியலை திருத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் நாட்டினுள் நிலவும் கொவிட்19 நிலமை காரணமாக சுகாதார நடைமுறைகளுக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வாக்காளர் பெயர் பட்டியலில் வசிக்குமிடம் தொடர்பில் அவதானித்து அதில் திருத்தங்கள் இருப்பின் மாத்திரமே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Fri, 06/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை