கொழும்பின் பிரபல்யமான நிலப்பரப்புகளை விற்பனை செய்யும் திட்டத்தை அரசு முன்னெடுப்பதாக அநுரகுமார திஸாநாயக்க குற்றச்சாட்டு

கொழும்பின் பிரபல்யமான இடங்களிலுள்ள நிலப்பரப்புகளை விற்பனை செய்யும் செயல் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் ஒன்லைன் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

கொழும்பிலுள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிலங்களை விற்பனை செய்ய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெலிக்கடை சிறைச்சாலையை விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர். இங்கு 42 ஏக்கர் நிலமுள்ளது. இந்தத் தேவைக்காக சிறைச்சாலையை களுத்துறை மில்லனிய என்ற இடத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

கிரேணட் ஒரியன் ஹோட்டல், தலைமை தபாலகம், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அலுவலகம் உள்ளிட்டவற்றின் காணிகளை விற்பனை செய்ய அமைச்சரவைப் பத்திரமொன்றை தாக்கல் செய்துள்ளனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் கொழும்பின் பிரபல்யமான வர்த்தக கட்டடங்களை விற்பனை செய்வதுதான் பொருளாதார உபாயமார்க்கமா?.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Tue, 06/08/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை