மட்டக்களப்புக்கும் இந்திய டெல்டா வகை வைரஸ் பரவும் அபாயம்

மட்டு. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை

இந்தியாவில் இனங்காணப்பட்ட டெல்டா வகை கொவிட்-19 வைரஸ் நட்டில் காணப்படுவதனால் மட்டக்களப்பிற்கும் அது பரவும் அபாயமுள்ளது எனவே பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (21) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 24மணிநேரத்தினுள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 89 பேர் தொற்றுக்குள்ளானதுடன் 2 பேர் மரணமாகியுள்ளனர். மட்டக்களப்பில் தற்போது மாறுபட்ட வித்தியாசமான அல்பா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அத்தோடு டெல்டா வைரசும் தொற்றக் கூடிய அபாயம் உள்ளது.

எனவே பொது மக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறுவும் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறும் சுகாதார நடமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

மேலும் கொரொனா வைரஸ் மூன்றாவது அலையின் பின்னர் மாவட்டத்தில் 3968 பேர் பாதிக்கப்பட்டள்ளதோடு 63 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு விசேட நிருபர்

Tue, 06/22/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை