தரவுகளுக்கு அமையவே பயணத்தடை நீடிப்பு முடிவு

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி கருத்து

நாட்டில் கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பில் ஆராய்ந்த பின்னரே பயணத் தடை தொடர்பில் அரசாங்கம் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளும் என கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தோடு ஒப்பிடுகை யில் தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையும் கொரோனா வைரஸ் மரணங்களும் அதிகரித்துள்ளன. நிலவும் கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையைக் கவனத்திற்கொண்டே பயணத் தடையை தொடர்வது பற்றி இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலை மற்றும் நடைமுறையிலுள்ள பயணத்தடை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் நாட்டில் 25 மாவட்டங்களிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். 7 மாவட்டங்களில் தலா 100 கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். அன்றைய தினம் கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 545 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் புதிதாக இனம் காணப்பட்டனர். நேற்று முன்தினம் மொத்தமாக 2735 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 06/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை