கொவிட் அறிகுறியிருப்பின் வீடுகளிலேயே சிகிச்சையளிக்க விசேட வேலைத்திட்டம்

கொவிட் 19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வீட்டில் தங்கவைத்து சிகிச்சையளிக்க பரிந்துரைக்கப்படுபவர்களை சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கண்காணிப்பு முறையின் கீழ் பரிமாரித்துச் செல்வதற்கான புதிய வேலைத்திட்டமொன்றை பிரதேச வைத்தியர்களின் ஊடாக முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கும் விசேட வைத்திய நிபுணர்களுக்குமிடையில் நேற்று திங்கட்கிழமை விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த சந்திப்பில் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது,

கொவிட் - 19 இன் மூன்றாவது அலை மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை மையங்களில் கடுமையான நெரிசல்களுக்கும் வழிவகுத்துள்ளது என்றார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் பிற சிறப்பு மருத்துவ சங்கங்கள் கொவிட் நோயாளர்களை பராமரிப்பதற்கு ஒரு விஞ்ஞான ரீதியான முறையின் அவசியத்தையும், சரியான சிகிச்சை மையத்திற்கு நோயாளர்கள் அனுப்பப்படும்வரை அவர்களை வீட்டிலேயே வைத்திருக்க முறையான முறையின் அவசியத்தையும் இதன்போது வலியுறுத்தின. அல்லது நோயாளிகளை அனுமதிப்பதில் தாமதமானது நோய் பரவுவதற்கு வழிவகுக்கும் என்பதுடன், இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்குமென வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். வைத்திய நிபுணர்களின் ஆலோசனையின் பேரில், பிரதேச மருத்துவ அதிகாரிகளின் மேற்பார்வையில் நோயாளிகளை கவனிக்கும் ஒரு புதிய முறையை சுகாதார அமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார். நோயாளிகள் தங்கக்கூடிய (அறிகுறியற்ற, அல்லது அறிகுறி உள்ளவர்கள்) வீட்டில் உரிய சிகிச்சையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் புதிய முறைமையின் ஊடாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Tue, 06/29/2021 - 08:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை