கடற்றொழிலாளருக்கு வாழ்வாதார ஒத்துழைப்பு

இந்தியாவிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை

பேர்ள் கப்பல் தீயால் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதார ஒத்துழைப்புக்களை இந்தியா வழங்க வேண்டுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

எக்ஸ் பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பல் விபத்து, மற்றும் கொரோனா பரவல் காரணமான முடக்கம் போன்றவற்றினால் நாடு முழுவதுமுள்ள கடற்றொழில் செய்பாடுகளும் கடற்றொழிலாளர்களும் எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சரினால் இந்தியத் தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள வாழ்வாதார சவால்கள் தொடர்பாக இதன்போது தெளிவுபடுத்திய கடற்றொழில் அமைச்சர், வாழ்வாதார சவால்களை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்பை இந்தியாவிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கை மக்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இந்தியா விரைந்து உதவுவதை நன்றியுடன் நினைவு கூர்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர்களுக்கும் இந்தியாவின் ஒத்துழைப்புக் கிடைக்குமென்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த இந்தியத் தூதுவர்,

தமது வெளியுறவு அதிகாரிகளுடன் கலந்துரையாடி சாதகமான முடிவுகளைத் தெரிவிப்பதாக கடற்றொழில் அமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.

Mon, 06/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை