இராஜாங்க அமைச்சுக்களின் முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதி நேற்று ஆராய்வு

இராஜாங்க அமைச்சுக்களின் முன்னேற்றம் தொடர்பில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்த சந்திப்பின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டறிந்தார்.

ஒவ்வொரு இராஜாங்க அமைச்சுக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கள், இலக்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளமை பற்றியும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும், இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு விளக்கினர். கொவிட்19 நோய்த்தொற்றுக்கு மத்தியில், தமது அமைச்சுக்கள் மக்களுக்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்களை பொருளாதார பாதுகாப்பிற்கு முதலிடமளித்து, முன்கொண்டு செல்வதற்கு பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர்.

அனைத்து இராஜாங்க அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்

Fri, 06/04/2021 - 08:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை