சீனாவின் எழுச்சியை கொண்டே ஆசியாவின் எழுச்சி இடம்பெறும்

சீன கம்யூனிஷ்ட் கட்சியின் 100 ஆவது ஆண்டு விழாவில் பிரதமர் மஹிந்த உரை

சீனாவின் எழுச்சியை அடிப்படையாகக் கொண்டே இந்நூற்றாண்டில் ஆசியாவின் எழுச்சி இடம்பெறும் என்பது எம் அனைவரதும் நம்பிக்கையாகும். அந்த வரலாற்று வெற்றியை சீனாவிற்கு பெற்றுக் கொடுத்தது நூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1921ஆம் ஆண்டு பன்னிரெண்டு பேர் ஒன்றிணைந்து உருவாக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூலமாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் (15) அலரி மாளிகையில் நடைபெற்றது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி இயக்கத்தின் ஆதரவு காரணமாக ஒரு அணிசேரா நாடாக சுதந்திர உலகில் முன்னேற முடிந்தது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழாவில், காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடரும் அவரின் உரையில்,..

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழா கொண்டாடப்படும் இச்சந்தர்ப்பத்தில் எமது அன்பான வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறோம். அக்கட்சியின் நூறாவது ஆண்டு விழா கொண்டாடப்படும் இவ்வருடம் ஆசியாவிலுள்ள நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானதாகும் என்பது எனது நம்பிக்கையாகும்.அதனாலேயே சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆசியாவிற்கே மிகப்பெரியதும், முக்கியமானதுமான கட்சி என்று நான் கூறினேன்.

சீனா என்பது நாடு மட்டுமல்ல. சீனா என்பது மாபெரும் நாகரிகம். சீனா பல்வேறு நாடுகளால் படையெடுப்பிற்கு உட்படுத்தப்பட்டது தவிர சீனா ஒருபோதும் பிற நாடுகள் மீது படையெடுக்கவில்லை. அத்துடன் உலகின் பெரும் தொகையான மக்கள் ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தை நம்பியுள்ள நாடு இதுவாகும்.

நாடாக சீனா பார்க்கப்படுகிறது. அதனால் தான் சீனாவை ஒரு சிறந்த நாகரிகம் என்று நான் கூறினேன். சீன கம்யூனிஸ்ட் கட்சி அந்த நாகரிகத்தின் அடையாளத்தை இனங்கண்டு பணியாற்றியமையாலேயே இன்று சீனாவை உலகின் சக்தியாக வளர்ச்சி பெறச்செய்ய முடிந்துள்ளது.

சீனாவிற்கும் எங்களுக்கும் இடையே வரலாற்று ஒற்றுமைகள் உள்ளன. சீனாவின் பெரிய சுவரை சீனா கட்டும் போது, நமது மன்னர் தேவநம்பியதிஸ்ஸ மன்னன் அனுராதபுர மஹமேவனா உயனவினை நிறுவுகிறார். எங்கள் வரலாற்று ஒற்றுமைகள் மற்றும் நட்பு மிகவும் சக்திவாய்ந்தவை.

ஒரு சக்திவாய்ந்த நாடாக சீனா நமது சுயாதீனத்தை பாதுகாக்க பெரிதும் உதவியது. இது பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய எங்களுக்கு உதவியது. சீன அரிசி, இறப்பர் ஒப்பந்தம் இலங்கையர்களுக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் இலங்கையின் சுதந்திரத்திற்காக சீனா செய்த சேவையை நாம் ஒருபோதும் மறக்க முடியாது.

எமது வரலாற்று ரீதியான நண்பர் என்றே நான் எப்போதும் சீனாவிற்கு கூறினேன். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிதான் சீன கம்யூனிஸ்ட் கட்சியை எங்களுக்கு மிக நெருக்கமாக்கியது.

கடந்த காலத்தில், பௌத்தமே சீனா மற்றும் இலங்கையை இணைத்தது. சுதந்திரத்திற்குப் பின்னர், எங்களிடையே உறவை முதலில் கட்டியெழுப்பியது கம்யூனிஸ்ட் கட்சிதான். சீன கம்யூனிஸ்ட் கட்சியைப் போலவே, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இலங்கை நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்ட பல விடயங்களை மதிக்கிறது.

தேசிய பொருளாதாரம், சுயாதீன நாடு, விவசாயம் உள்ளிட்ட உள்ளூர் தொழில்துறை முறையை நம்பியுள்ள ஒரு சுதந்திர நாடு.இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மறைந்த எஸ்.ஏ.விக்ரமசிங்க விவசாயத்தின் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

அவர் முன்வைத்த நில்வலா கங்கை திட்டம், இடதுசாரி தலைவர் ஒருவர் விவசாயம் குறித்து முன்வைத்த மிக முக்கியமான திட்டமாகும். இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி காரணமாக, சீனாவுடனான நமது கடந்தகால உறவை மேலும் வலுப்படுத்த முடிந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்றிய திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்கவின் காலத்தில், சீனாவுடனான எங்கள் உறவுகள் மிகச் சிறந்தவை. சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் எங்கள் இடதுசாரி இயக்கத்தின் ஆதரவே ஒரு அணிசேரா நாடாக உலகில் சுதந்திரமாக முன்னேற எங்களுக்கு உதவியது என்று நான் கூற வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து பணியாற்றிய அரசாங்கத்தின் கீழ் பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நாங்கள் முடிவுக்கு கொண்டுவந்தோம்.

Thu, 06/17/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை