இந்தியாவுக்கான கொவிட் நிதி பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளை சென்றடையலாம்

கொவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலையால் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கும் இந்தியாவுக்கு உதவும் வகையில் பாகிஸ்தான் சமூக சேவா அமைப்புகளினால் அமெரிக்காவில் திரட்டப்பட்ட பெருந்தொகைப் பணம் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களை சென்றடைய இருப்பதாக ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

'இந்தியா சுவாசிக்க உதவுங்கள்' என்ற பெயரில் அமெரிக்காவில் இந்த அமைப்புகள் நிதி திரட்டியதாகவும் அமெரிக்காவில் இந்தியா பேணிவரும் நல்லெண்ணத்தையும் இந்தியர்கள் மீதான மரியாதையையும் இதன் பொருட்டு பயன்படுத்திக் கொண்டதாகவும் 'டிஸ்இன்போலெப்' என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இணையத்தில் வெளியாகும் போலிச் செய்திகளையும் பிரசாரங்களையும் அம்பலப்படுத்தும் பணியை இந்த இணையதளம் செய்து வருகிறது.

'கொவிட் - 19 மோசடி 2021' என இம் மோசடிக்கு பெயரிட்டுள்ள இந்த இணையதளம், இதை மனித வரலாற்றிலேயே மோசமான மோசடி என வர்ணித்துள்ளது.

இந்தியாவுக்காக நிதி திரட்டிய அமைப்புகளில் வட அமெரிக்க இஸ்லாமிய மருத்துவ அமைப்பும் ஒன்றாகும். இந்த அமைப்புக்கு 30 கோடி முதல் 158 கோடி வரையிலான இந்திய நாணயத்தில் நிதி கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது.

எனினும் இந்த அமைப்புக்கு இந்தியாவில் எந்தக் கிளையும் கிடையாது. இந்த பாகிஸ்தானிய சமூக சேவை அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் இயங்கிவரும் இஸ்லாமிய தீவிரவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகவும் பாகிஸ்தான் இராணுவத்துடன் இணைந்து செயல்படுபவை என்றும் இந்த இணையதளம் தெரிவித்துள்ளது.

Mon, 06/21/2021 - 10:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை