அரசி விலை உயர்வை கட்டுப்படுத்தவே ஒரு இலட்சம் மெ.தொ அரிசி இறக்குமதி

-அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய

உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள அரிசியின் அசாதாரண விலை உயர்வை எதிர்கொள்வதற்காகவே 1,00,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த போகத்தில் எந்த வித உரப் பற்றாக்குறையும் கிடையாதென்றும் அவர் குறிப்பிட்டார். 1,00,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான தீர்மானத்துக்கும் உரப் பிரச்சினை காரணமல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அதிகளவில் உரத்தை இறக்குமதி செய்ததால் இந்த போகத்தில் போதுமான அளவு உரம் கைவசமுள்ளது. எவ்வாறாயினும், விநியோகத்தில் சில குறைபாடுகள் இருப்பதாகவும், அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.

மேலதிக அரிசியை கையிருப்பில் வைத்திருப்பதற்காகவும் உள்ளூர் சந்தையில் அரிசி விலையில் அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காகவுமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பசளை பிரச்சினை வருவதாக இருந்தால் இந்த போகத்திலன்றி அடுத்த போகத்திலேயே வரவேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.(பா)

ஷம்ஸ் பாஹிம் 

Wed, 06/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை