ஜம்மு - காஷ்மீர் சினிமாத்துறை அபிவிருத்தி

யூனியன் நிர்வாகம் நடவடிக்கை

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு, திரைப்படத் துறையில் ஆர்வம் கொண்ட இளைஞர்களை ஊக்குவித்து இந்தியாவின் ஏனைய பிரதேசங்களில் காணப்படும் அளவுக்கு திரைத்துறையை தரம் உயர்த்தும் திட்டமொன்றை முன்வைத்துள்ளது.

இப் பிராந்தியத்தைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள், அழகுக் கலைஞர்கள், நடன பயிற்றுவிப்பாளர்கள், படப்பிடிப்பாளர்கள், நடிகர்கள் உட்பட கலைத்துறை சம்பந்தப்பட்டவர்களை ஜுலை 10ம் திகதிக்கு முன் இணைய முகவரி ஒன்றில் தம்மைப் பதிவுசெய்து கொள்ளுமாறு அரசின் தகவல் மற்றும் பொதுத் தொடர்புகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இப்பிராந்திய கலைஞர்களை இந்தியாவின் பிரபலமான திரைப்படத்துறையில் ஈடுபடுத்தவும் இப்பகுதிக்கே உரிய இயற்கை வனப்பை மேலும் அபிவிருத்தி செய்யவுமென ஜம்மு-காஷ்மீர் நிர்வாகங்கள் புதிய கொள்கை ஒன்றை அறிமுகம் செய்துள்ளன. 

Thu, 06/24/2021 - 12:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை