9 மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

9 மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கை நீடிப்பு-Landslide Warning-Extended Till Tomorrow 4-30pm

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, காலி, களுத்துறை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு நிலச்சரிவு ஆபத்து தொடர்ந்தும் இருப்பதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, நாளை (07) பிற்பகல் 4.30 மணி வரை இவ்வெச்சரிக்கை நீடிக்கப்படுவதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எனவே குறித்த மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகள், சாய்வான நிலப்பிரதேசங்களில் உள்ள மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Sun, 06/06/2021 - 18:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை