பிரித்தானியாவில் இலங்கை உட்பட 7 நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

ஜூன் 08ஆம் திகதி முதல் அமுல்

கொவிட் தொற்று பரவல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளை பிரித்தானியா சிவப்பு பட்டியலில் இணைத்துள்ளது.

இலங்கை தற்போது செம்மஞ்சள் பட்டியலில் உள்ளதென்றும் ஜுன் 8ஆம் திகதி முதல் சிவப்பு பட்டியலில் இணையும் என்றும் பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது. இந்த சிவப்பு எச்சரிக்கையானது எதிர்வரும் 8ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான், பஹ்ரேன் போன்ற நாடுகளும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 7 நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டிலிருந்து பிரித்தானியாவிற்கு வருகை தரும் நபர்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளைச் சேர்ந்த பயணிகள், தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் பிரித்தானியாவுக்குச் செல்வதற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமெனவும் அறிவித்துள்ளது. அதேநேரம், சிவப்பு பட்டியலில் உள்ள எந்த நாட்டிற்கும் செல்ல வேண்டாம் என்று பிரிட்டன் பிரஜைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Sat, 06/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை