7 ஆம் திகதிக்கு பின்னரும் பயணக்கட்டுப்பாடா?

இதுவரை எந்த முடிவும் இல்லை வதந்திகளை நம்ப வேண்டாம்

நாடளாவிய ரீதியில் தற்போதுநடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணத் தடையை எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதிக்குப் பின்னரும் நீடிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் இதுவரை  எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் கடந்த மே 21ம் திகதி முதல் எதிர்வரும் ஜூன் 7ஆம் திகதிவரை நாடளாவிய பயணத்தடையை நடைமுறைப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கடந்த 31ஆம் திகதி மேற்படி பயணத்தடை நீக்கப்படும் என அரசாங்கம அறிவித்திருந்த போதும் சுகாதாரத் துறை நிபுணர்களின் ஆலோசனைக்கு இணங்க அந்த பயணத்தடை தொடர்ந்தும் எதிர்வரும் ஜூன் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. எவ்வாறாயினும் ஜூன் 7ஆம் திகதிக்கு பின்னரும் நாடளாவிய பயணத்தடையை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இதுவரை எந்த இறுதித் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

ஏழாம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை மேலும் நீக்கப்படலாம் என தற்போது பல்வேறு தரப்பிலிருந்தும் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன எனினும் அவ்வாறான எந்த தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான சுகாதாரத் துறை நிபுணர்கள் உள்ளடங்கிய விசேட குழுவே அதற்கான தீர்மானத்தை மேற்கொள்ளும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 06/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை