65,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு கிடைக்கும்

ரஷ்ய உற்பத்தியான ஸ்புட்னிக் வி 65,000 தடுப்பூசிகள் இன்று நாட்டுக்கு கிடைக்கவுள்ளதாக மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இத்தடுப்பூசிகள் தெரிவுசெய்யப்பட்ட குழுக்களுக்கு உடனடியாக வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு ரஷ்ய அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் இராஜங்க அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் சீன உற்பத்தியான சைனோபார்ம் மேலும் 60 லட்சம் தடுப்பூசிகள் இந்த வாரத்தில் இலங்கைக்கு கிடைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இதுவரை 20,000 சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அந்த தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கும் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Fri, 06/11/2021 - 08:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை