மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சினோபார்ம் முதலாவது டோஸ்

இரு தினங்களில் ஆரம்பம்

மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் தொடங்கப்படவுள்ளதாக பொது சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் எச்.எம்.ஆர்னல்ட் தெரிவித்துள்ளார்.

“மேல் மாகாணத்தில் கொவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை பெற்றுக்கொடுக்கும்

பணி கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகவுள்ளது.

மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் சினோபார்ம் தடுப்பூசி இவ்வாறு பெற்றுக்கொடுக்கப்படும்.

சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரிகள் (எம்ஓஎச்) அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தடுப்பூசி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களில் முன்னெடுக்கப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை சுகாதார அமைச்சு கடந்த மாதம் ஆரம்பித்துள்ளதுடன், நாடு முழுவதும் இந்தப் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Wed, 06/30/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை