திருமலையில் 4G இன்மையால் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் கோமரங்கடவல மற்றும் மொரவெவ பிரதேசங்களில் 4G இல்லாமையினால் மாணவர்களின் இணையவழி கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 தொற்றினால் பாடசாலை மூடப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இணைய வழிக் கல்வியை கற்பிப்பதற்காக பெற்றோர்கள் தங்களது நகைகளை அடகு வைத்து கையடக்க தொலைபேசிகளை மாணவர்களுக்கு வாங்கிக் கொடுத்தும், மாணவர்கள் வீட்டின் கூரைக்கு மேல் மற்றும் வயல் வெளியை தேடியும், குளக்கட்டை தேடியும் சென்று கவரேஜ் தேடவேண்டிய நிலை ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஆசிரியர்கள் இணையவழி ஊடாக கற்பிக்கும் சந்தர்ப்பத்தில் கவரேஜ் இல்லாமையினால் ஆசிரியர்கள் சொல்லும் விடயங்கள் மாணவர்களுக்கு விளங்க வில்லை எனவும், மாணவர்கள் சொல்லும் விடயங்கள் ஆசிரியர்களுக்கு விளங்குவதில்லை எனவும் இதனால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் கோமரங்கடவல மற்றும் மொரவெவ பிரதேசங்களில் உள்ள எத்தாபெந்திவெவ, கிராம மாணவர்கள் தங்களது கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர்)

 

Wed, 06/23/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை