மேலும் 40 மில்லியன் தடுப்பூசிகள் அடுத்த மாதம் இலங்கைக்கு கிடைக்கும்

அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நேற்று தெரிவிப்பு

இலங்கைக்கு மேலும் 40 லட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் அடுத்த மாதம் கிடைக்கவுள்ளதாக அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட மருத்துவர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

நாட்டின் தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்காக இதுவரை வெளிநாடுகளிலிருந்து 40 லட்சம் தடுப்பூசிகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், மேலும் 40 லட்சம் தடுப்பூசிகள் அடுத்த மாதம் இலங்கைக்குக் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்புக்கான விஷேட குழுவின் கூட்டம் நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

அதன்போது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் நாட்டில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தேவையான தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

 

Sat, 06/19/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை